Saturday, October 9, 2010

4 லட்சம் கொடுத்தால்தான் டப்பிங்

Aadhi
பேசாம தன் பெயரை 'பாதி'ன்னு வச்சுக்கலாம் ஆதி! படம் துவங்குகிற போது சுமூகமாக தொடரும் இவரது உறவு, பாதிப்படம் முடிந்த பின் வேறு மாதிரி
ஆகிவிடுவதாக கிசுகிசுக்கிறார்கள் திரையுலகத்தில். இவரை வைத்து படம் எடுத்த எல்லா இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கூட இப்படி ஒரு அனுபவம் இருப்பதாக பேச்சு.
சரி, லேட்டஸ்ட் பஞ்சாயத்து என்னவாம்? நாடோடிகள், கோரிப்பாளையம், சிந்து சமவெளி போன்ற படங்களை தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன். இவரது தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ஆடுபுலி. இதில் ஆதிதான் ஹீரோ. ஈரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரை புக் பண்ணிய படம் இது. அதனால் சம்பளத்தை முப்பத்தைந்து லட்சம் என்று நிர்ணயித்தாராம் தயாரிப்பாளர்.
படம் முடிவதற்குள் அதில் முப்பத்தியரு லட்சத்தை வாங்கிவிட்டார் ஹீரோ. டப்பிங் பேச அழைத்தார்களாம். மீதி நாலு லட்சத்தை கொடுத்திருங்க வர்றேன் என்ற இவர் சொல்ல, ரிலீஸ் நேரத்தில் வாங்கிக்கலாமே என்று தயாரிப்பாளர் சொல்ல, அங்கு ஆரம்பித்தது பிரச்சனை. பணம் வந்தால்தான் டப்பிங் என்றாராம் கறாராக. 'கோடி கோடியா கொட்டி படம் எடுக்கிறேன். கேட்கறதுக்கு முன்னாடி 99 சதவீத பணத்தை செட்டில் பண்ணிட்டேன். நாலு லட்சத்துக்கு நம்பக் கூடாதா?' என்றார் ராயப்பன்.
சாண்டில்யன் வர்ணனை போல நீண்டு கொண்டே போன இந்த பிரச்சனைக்கு ஒரே முற்றுப்புள்ளி... நாலு லட்சம்! தெலுங்கில் பெரிய தயாரிப்பாளரின் பிள்ளை, அந்த நாலை வாங்கிக் கொண்டுதான் வாயையே திறந்தாராம்!

No comments:

Post a Comment