Showing posts with label சீதா. Show all posts
Showing posts with label சீதா. Show all posts

Saturday, September 18, 2010

சீதாவின் கல்யாணம் பார்த்திபனின் வாழ்த்து


டைவர்சும் டைவர்சுக்கு பின்பான வாழ்க்கையும் அவரவர் அனுபவத்திற்குட்பட்டது. ஆனால் இதை வேடிக்கையாகவும் காயப்படுத்தியும் பார்ப்பது சமுதாயத்தின் கேவலமான விளையாட்டுகளில் ஒன்று. பிரபுதேவா
விவகாரத்தை போலவே சீதாவின் மற்றொரு காதலும் இப்படிதான் பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் தன் காதலரான சின்னத்திரை நடிகர் சதீஷை திருமணம் செய்து கொண்டார் என்று சீதா குறித்து ஒரு செய்தி. இன்னும் கொஞ்சம் அதிகப்படியாக அத்துமீறிய செய்தி தாள் ஒன்று அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி கவலைப்பட்டது.
இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதை போல எங்களுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. சதீஷுக்கு முறைப்படி விவாகரத்து கிடைத்ததும் எங்கள் கல்யாணம் நடக்கும் என்று கூறியிருக்கிறார் சீதா.
இதற்கிடையில் இந்தக் காதலையும் திருமணத்தையும் பற்றி தனது கருத்தை கூறியிருக்கிறார் பார்த்திபன். சீதாவின் முன்னாள் கணவர். மனமும் மகிழ்வும் இணைவதுதான் பேரின்பம். அந்த பேரானந்தத்தை அடையதான் அனைவரும் போராடுகிறோம். அந்த பேரின்ப பெருவிழா, யாருக்கு எதன் மூலம் நிகழ்ந்தாலும் அவர்களை உளமார வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார் அவர்.

Thursday, September 16, 2010

நடிகை சீதா மறுமணம்

நடிகர் பார்த்திபனிடமிருந்து விவகாரத்து பெற்று பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த நடிகை சீதா சின்னத்திரை நடிகர் சதீஷை மறுமணம் செய்துகொண்டார்.
தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள
நடிகை சீதா ‘ஆண்பாவம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இயக்குனர் பார்த்திபன் கதாநாயகியாக நடித்து முதன்முதலாக இயக்கிய ‘புதிய பாதை’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு சீதாவின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் வீட்டைவிட்டு வெளியேறி சீதா, பார்த்திபனுடன் ரகசிய திருமணம் செய்துகொண்டார். 20 வருடங்களுக்கு முன் இத்திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அபிநயா, கீர்த்தனா என்ற இரு மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற வளர்ப்பு மகனும் இருக்கிறார்கள்.
பார்த்திபனுக்கும், சீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் குடும்பல நல நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து செய்துகொண்டனர். இதன் பின் நடிகை சீதா பெற்றோருடன் வாழ்ந்துவந்தார். இவருடன் மூத்த மகள் அபிநயா மட்டும் இருக்கிறார். இந்த விவாகரத்திற்கு பின் சின்னத்திரையில் நாடகத் தொடர்களிலும், திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார்.
இந்நிலையில் சின்னத்திரையில் நடித்து வரும்வேளையில் சின்னத்திரை நடிகர் சதீஷ்க்கும் சீதாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கணவன் - மணைவி போல ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, சென்னை சாலிகிராமத்திலுள்ள சீதா வீட்டில் அவரின் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.
இத்திருமணம் குறித்து நடிகை சீதா செய்தியாளர்களிடம் கூறியவதாவது: “எனக்கு துணை வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். சதீஷ் என் வாழ்க்கையில் வந்தது பற்றி சந்தோழப்படுகிறேன். அவரை திருமணம் செய்துகொண்டதை பெருமையாக கருதுகிறேன். வயதான காலத்தில் ஒரு பெண் ஆண் துணையில்லாமல் வாழ முடியாது.
அதற்காகவே சதீஷை திருமணம் செய்துகொண்டேன். எனக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதனால் இன்னொரு குழந்தை பெற்றுகொள்வதில் உடன்பாடில்லை” என்று கூறினார்.