Showing posts with label ஜெனிலியா. Show all posts
Showing posts with label ஜெனிலியா. Show all posts

Saturday, November 6, 2010

ஆஸ்திரேலிய பேய்களும் அழகி ஜெனிலியாவும்


பேய்வீடு கேள்விப்பட்டிருக்கிறோம், பேய் ஓட்டல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜெனிலியாவைக் கேளுங்கள், கண்களில்
மிரட்சியுடன் ஒரு பத்து ரீல் கதையையே உங்களுக்குச் சொல்வார்.

இந்திப் பட ஷூட்டிங்குக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தார் ஜெனிலியா. நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அறையின் சுவர்களில் திகிலூட்டும் படங்கள் வரையப்பட்டிருந்தது.


நேரம் செல்லச் செல்ல அறையில் மர்மக் குரல் ஒன்று கேட்கத் தொடங்கியது. முதலில் ஏதோ மனபிராந்தி என்று நினைத்தவர், விடாமல் சத்தம் கேட்கவே அறையை விட்டு வெளியே ஓடிவந்திருக்கிறார்.

அவரைப் போலவே நிறைய பேர் இந்த மர்மக் குரலைக் கேட்டு ஓடிவந்தனராம். பிறகென்ன, வேறு ஓட்டலுக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டார் அம்மணி.

Thursday, October 7, 2010

முன்று மொழியிலும் கலக்கும் ஜெனிலியா


பொம்மரிலு தெலுங்கு படத்தில் நடித்தார் ஜெனிலியா. அதே படத்தின் தமிழ் ரீமேக்கான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடித்தார். பின் இந்தி ரீமேக்கிலும் நடித்து வருகிறார். இதே போல் தெலுங்கில் ரெடி படத்தில் நடித்தார். இப்போது அதே படத்தின் தமிழ் ரீமேக்கான உத்தமபுத்திரன் படத்திலும் அவர் நடிக்கிறார்.இது பற்றி ஜெனிலியா கூறியதாவது:ஒரு படத்தில் நடித்த பின் அதே படம் இன்னொரு மொழியில் ரீமேக் செய்தால் அதில் சிலர் நடிக்க மாட்டார்கள். நான் அப்படியல்ல. ஒரு மொழியில் நடித்ததைவிட இன்னொரு மொழியில் அந்த கேரக்டரை இன்னும் மெருகூட்டி நடிக்கவே விரும்புவேன். தெலுங்கில் நான் நன்றாக நடித்ததால்தான் பொம்மரிலு படத்தின் இரு மொழி ரீமேக்குகளிலும் என்னை தேர்வு செய்தார்கள். அது எனக்கு கவுரவம்தான். அதே போல், ரெடியில் நடித்த என்னையே உத்தமபுத்திரனிலும் நடிக்க கேட்டார்கள். அதுவும் எனக்கு பெருமைதான். அதனால்தான் நடிக்கிறேன். 2 வருடங்களுக்கு பின் தமிழில் நடிக்கிறேன். மித்ரன் ஜவஹர் இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார்.இவ்வாறு ஜெனிலியா கூறினார்.

Sunday, September 19, 2010

ஜெனிலியாவுக்கு டிப்ஸ் கொடுத்த பிரபுதேவா


‘நயன்தாராவை மணப்பேன்’ என்று மும்பையில் நடந்த ‘உருமி’ ஷூட்டிங்கின்போது சமீபத்தில் அறிவித்தார் பிரபுதேவா. இதையடுத்து அந்த
ஷூட்டிங்கில் இருந்த பிருத்விராஜ், ஜெனிலியா, நித்யா மேனன் போன்றவர்கள் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.நட்சத்திர கூட்டத்தில் ஜொலித்த யூனிட்டில் எப்போதும் கலகலப்பு. ஒரு வரி கதைகள் சொல்லி அனைவரையும் அசத்தினார் பிரபு தேவா. அவரது பேச்சில் மயங்கிய நடிகைகள் மெய்மறந்து அவரது முகபாவனைகளை உன்னிப்பாக கவனித்த வண்ணம் இருந்தனர். மேலும் நடன அனுபவத்தை பிரபு தேவா சொல்லத் தொடங்கியவுடன் ஜெனிலியாவும், நித்யா மேனனும் அவரை சூழ்ந்து கொண்டனர். இடுப்பை வளைத்து ஆடுவது, கால் விரல்களை தரையில் பேலன்ஸ் செய்து ஆடுவது போன்ற அசைவுகளில் நடிகைகளுக்கு சந்தேகம் எழுந்ததால் அதை எப்படி ஆடுவது என்று டிப்ஸ் கேட்டு தொந்தரவு செய்தார்களாம். மூவருக்கும் சளைக்காமல் டிப்ஸ் கொடுத்து அசத்தினார் பிரபு தேவா.