Showing posts with label மல்லிகா ஷெராவத். Show all posts
Showing posts with label மல்லிகா ஷெராவத். Show all posts

Tuesday, October 5, 2010

நிர்வாண காட்சியில் நடிக்க மறுப்பு


தமிழ், ஆங்கிலம் உட்பட 5 மொழிகளில் வெளியாகும் படம் ‘ஸ்…ஸ்…ஸ்’. பாம்பு சீறும் சத்தம்தான்
தலைப்பு. இதில் நாக கன்னியாக நடித்திருக்கிறார் மல்லிகா ஷெராவத். இர்பான் கான் ஹீரோ. முக்கிய வேடத்தில் திவ்யா தத்தா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹாலிவுட்டில் நடந்துள்ளது. பாம்பு தோல் உரிக்கும் காட்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது. ஒரு காட்சியில் மல்லிகாவை நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் ஜெனிபர் சேம்பர் கேட்க, அதற்கு மறுத்துவிட்டாராம் மல்லிகா. இதே படத்தின் வஞிளம்பரத்துக்காக ட்விட்டரில் அரை நிர்வாண போஸ் கொடுத்திருந்தார் மல்லிகா. இது பற்றி அவர் கூறும்போது, ‘‘போட்டோவுக்கு போஸ் தருவது வேறு. படத்தில் நடிப்பது என்பது வேறு. அதனால் அப்படிப்பட்ட காட்சியில் நடிக்க மறுத்தேன்’’ என்றார்

Monday, October 4, 2010

தமிழில் வருகிறார் மல்லிகா ஷெராவத்


ஹாலிவுட் இயக்குனர் ஜெனிபர் சேம்பர் லிஞ்ச் இயக்கும் படம் ‘ஹிஸ்’. மல்லிகா ஷெராவத் நடிக்கும் இந்த படம் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படுகிறது.
இதை, தமிழில் ‘ஸ்...ஸ்...ஸ்’ என்ற பெயரில் ஸ்ரீ திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் ரிலீஸ் செய்கிறது. இந்தி, தெலுங்கு, மலையாளத்திலும் வெளியாகும் இந்த படத்தில், பாலிவுட் நடிகர் இர்பான் கான், நடிகை திவ்யா தத்தா ஆகியோரும் நடிக்கிறார்கள். மனித உருவம் எடுக்கும் பாம்பு பற்றிய கதை என்பதால் அதன் சத்தத்தையே தலைப்பாக்கி இருக்கிறார்கள். மது அம்பாட் ஒளிப்பதிவு, இசை அலெக்ஸாண்டர். வரும் 22&ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.