Showing posts with label ரஜனி. Show all posts
Showing posts with label ரஜனி. Show all posts

Monday, October 4, 2010

எந்திரன் திரைப்பட ஹிந்தி பதிப்பு HG







Robot (2010) 1CD PDvD*Rip* *Audio Cleaned*


Image


Image
Banner..........: Sun Pictures
Genre...........: Romance/SCI-Fic
Year............: 2010
Cast............: Rajni Kanth , Aishwariya Roy
Size............: 1CD
Resolution .....: 640x272
Audi............: mp3
Audio Language..: Hindi
Container.......: XviD (Avi)


Image
Image


Image


Image


Image


Image


Image


Image


Image


Image
Image

http://hotfile.com/dl/73538071/af63661/Backd00red.Org.ROBOT.PDVDRIP.400MB.part1.rar.html
http://hotfile.com/dl/73537553/b7b5477/Backd00red.Org.ROBOT.PDVDRIP.400MB.part2.rar.html
Image

http://www.fileserve.com/file/ReKa5BP/Backd00red.Org.ROBOT.PDVDRIP.400MB.part1.rar

http://www.fileserve.com/file/aJnCEdG/Backd00red.Org.ROBOT.PDVDRIP.400MB.part2.rar


Image

http://www.filestab.com/xisic9k47pci/Backd00red.Org.ROBOT.PDVDRIP.400MB.part1.rar.html
http://www.filestab.com/ll1sxwps87ab/Backd00red.Org.ROBOT.PDVDRIP.400MB.part2.rar.html


Image

http://rapidshare.com/files/422930658/Backd00red.Org.ROBOT.PDVDRIP.100MB.part1.rar
http://rapidshare.com/files/422930642/Backd00red.Org.ROBOT.PDVDRIP.100MB.part2.rar
http://rapidshare.com/files/422930708/Backd00red.Org.ROBOT.PDVDRIP.100MB.part3.rar
http://rapidshare.com/files/422930694/Backd00red.Org.ROBOT.PDVDRIP.100MB.part4.rar
http://rapidshare.com/files/422930649/Backd00red.Org.ROBOT.PDVDRIP.100MB.part5.rar
http://rapidshare.com/files/422930661/Backd00red.Org.ROBOT.PDVDRIP.100MB.part6.rar
http://rapidshare.com/files/422930643/Backd00red.Org.ROBOT.PDVDRIP.100MB.part7.rar
http://rapidshare.com/files/422930648/Backd00red.Org.ROBOT.PDVDRIP.100MB.part8.rar

Thursday, August 19, 2010

எந்திரன் விழாவிற்கு வராதது ஏன் : தனுஷ் விளக்கம்!


தமிழ் திரையுலகமே திரண்ட எந்திரன் பாடல் வெளியீடு மலேசியாவில் நடந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் நடிகர் தனுஷ்
வரவில்லை. இது பலருக்கும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் எந்திரன் பாடல் வெளியீடு நடந்த அதே நாளில் தனுஷூக்கு ‘மாப்பிளை’ பட ஷூட்டிங் இருந்ததாம். இதனால் தயாரிப்பாளர் நலம் கருதி தனுஷ் எந்திரன் ஆடியோ விழாவிற்குச் செல்லாமல் ‘மாப்பிளை’ படப்பிடிப்பிற்கு சென்றாராம்.

எந்திரன் சென்னை விற்பனை உரிமை


தமிழ் திரையுலகின் அத்தனை சாதனைகளையும் முறியடித்துக் கொண்டிருக்கிறது எந்திரன். ஆடியோ விற்பனையில் இனி வேறு எந்தப் படமாவது இந்த
சாதனையில் பாதியையாவது நெருங்குமா என்று கேட்கும் அளவுக்கு மிரள வைத்திருக்கிறது எந்திரன். இதுவரை நான்கு முறை மறுபதிப்பை வெளியிட்டுள்ளது திங்க் மியூசிக் நிறுவனம். எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இசையமைத்திருந்தாலும் சில ஆயிரம் சிடிக்கள் விற்றாலே பெரிய விஷயம் என்ற நிலைதான் இன்று ஆடியோ மார்க்கெட்டில் நிலவுகிறது.
ஆனால் ரஜினியின் எந்திரன் சிடிக்களோ வெளியான சில தினங்களில் 7 லட்சத்துக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்திருப்பதாக ரேடியோ மார்க்கெட் விற்பனையாளர்கள் வியக்கிறார்கள்.
எந்திரனின் தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்பான ரோபோவின் இசை விற்பனையும் அமோகமாக உள்ளது.
இந்தப் படத்தின் விநியோக உரிமையை பக்கத்து மாநிலங்களில் பெரும் விலைக்கு விற்றுள்ளது சன் பிக்சர்ஸ். தெலுங்கில் ரூ 33 கோடி, கர்நாடகத்தில் ரூ 9.5 கோடி, கேரளாவில் ரூ 6 கோடி (விநியோகஸ்தர் விஜயகுமார்) என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தை கதிகலங்கடிக்கும் விலைக்கு விற்பனையாகியுள்ளது எந்திரன். இந்திய சினிமா சரித்திரத்தில், மாநில மொழிப் படம் ஒன்று பிற மாநிலங்களில் இந்த விலைக்குப் போயிருப்பது இதுவே முதல்முறை. குறிப்பாக கேரளாவில், மம்முட்டி, மோகன்லால் படங்களின் விநியோக உரிமை இதில் பாதி கூட கிடையாது!
இந்திப் பதிப்பை வீனஸ் ரெக்கார்ட்ஸ் அண்ட் டேப்ஸ் நிறுவனம் பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. ஆனால் கைமாறிய தொகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னமும் வெளியிடப்படவில்லை.
இதுவரை தமிழகம் மற்றும் உலக உரிமை விற்பனை விஷயத்தில் மவுனம் சாதித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.
தமிழக விநியோக உரிமையைப் பெறுவதில் பெரும் போட்டியே நிலவுகிறது. ஆனால் எந்தப் பகுதியும் யாருக்கும் விற்பனை செய்யப்படவில்லை.
குறிப்பாக சென்னை நகர உரிமையைப் பெறுவதில் பெரும் விநியோகஸ்தர்கள் முட்டி மோதுகிறார்கள். ரஜினியின் சிவாஜி பட சென்னை நகர உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கினார். வாங்கிய விலையை விட இருமடங்குக்கும் அதிகமாக வசூல் பார்த்தார். அந்த நப்பாசையில் எந்திரன் உரிமையைப் பெற்றுவிடத் துடிக்கிறாராம். அவரைப் போலவே இன்னும் பலரும் மோதுவதால், சன் தரப்பு அமைதி காக்கிறது.
“ஆனால் ஒரு விஷயம் நிச்சயம்… எந்திரன் சென்னை விற்பனை உரிமை என்பது தமிழ் சினிமா கனவிலும் நினைத்திராத பெரும் விலைக்குக் கைமாறவிருக்கிறது. அதே போல, சென்னை நகரில் மட்டும் 30 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகப் போகிறது… இவையெல்லாம் ஒரே ஒரு மனிதருக்காக… அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி… வேறு யாராலும் இந்த சாதனையை நிகழ்த்த முடியாது” என்கிறார் விநியோகஸ்தர் சங்கப் பிரதிநிதி ஒருவர்.

Friday, August 13, 2010

அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் ரஜினிக்கு உண்டு சிரஞ்சீவி!


சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்த்தால் எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது. நானும் அரசியலை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு நடிக்க
வந்துவிடலாம் போல உள்ளது, என்றார் தெலுங்கு நடிகரும் பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி. ரஜினி -ஐஸ்வர்யா ராய் நடிக்கும் எந்திரன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகிறது. சில தினங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகும் ‘ரோபோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாதில் நடந்தது. இதில் ரஜினியின் நெருங்கிய நண்பர்களான மோகன் பாபு மற்றும் சிரஞ்சிவி பங்கேற்றனர். ‘ரோபோ இசையை சிரஞ்சிவி வெளியிட்டார்.
இதில் பேசிய சிரஞ்சிவி எடுத்த எடுப்பிலேயே, “எனக்கு பொறாமையாக உள்ளது”, என்றார். மேலும் அவர் கூறுகையில், “நான், ரஜினி, மோகன் பாபு மூவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். மூவருக்குமே அரசியலில் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒவ்வொருவராக அடியெடுத்து வைப்போம் என்ற மனநிலையில் இருந்தோம். மோகன்பாபு முதலில் அரசியலுக்கு வந்தார். நான் ‘பிரஜா ராஜ்ஜியம்’ கட்சி துவங்கினேன். அரசியல் வாழ்க்கைக்கு வந்ததும் சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்தேன்.
ஆனால் ரஜினி இவ்வளவு இளமையாக திரையில் ஐஸ்வர்யாராயுடன் டூயட் பாடுவதைப் பார்க்கும்போது எனக்கு பொறாமையாக உள்ளது. ‘ரோபோ’ என்ற இந்தியாவின் பிரமாண்டமான படத்தில் ரஜினி கலக்கிக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லையே என ஏக்கமாய் உள்ளது. இதையெல்லாம் நான் மிஸ் பண்ணிட்டேன். இதைப் பார்த்ததும் மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டது எனக்கு…
ஆனால் பொறாமை என்பது ஒரு கலைஞனாக நான் சொன்னது. ஆனால் அண்ணன் ரஜினி எதைச் செய்தாலும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தும் சகோதரன் நான். அவரைப் போன்ற அற்புதமான கலைஞரையும், அருமையான மனிதரையும் பார்க்க முடியாது. இந்தப் படம் சரித்திரம் படைக்கும்”, என்றார்.

எந்திரன்: போலி பத்திரம் தயாரித்த ஷங்கர் மேனேஜர் கைது!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா திரைப்படமான எந்திரன் தெலுங்கு உரிமையை போலிப் பத்திரம்
மூலம் விற்க முயன்ற இயக்குநர் ஷங்கரின் புரொடக்ஷன் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தென்னிந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷங்கர் அலுவலகத்தில் புரொடக்ஷன் மேனேஜராக இருந்தவர் உதய குமார். இவரும் திருப்பதி திருமலா பிலிம்ஸ் அலுவலக ஊழியர் சுரேந்திரன் என்பவரும் போலியாக சில ஆவணங்களைத் தயாரித்தனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.27 கோடிக்கு எந்திரன் தெலுங்கு உரிமையை விற்றுவிட்டதாக அந்தப் பத்திரங்களில் பக்காவாக எழுதியிருந்தனர்.
இந்தப் பத்திரத்தின் நகல்களை வைத்துக் கொண்டு இருவரும் ஆந்திராவில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமையாளர்களையும் தொடர்பு கொண்டு ரோபோ படத்தை திரையிட பேரம் பேசியுள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களும் இவர்களை நம்பி அட்வான்ஸாக ரூ.2 கோடி வரை கொடுத்துள்ளனர்.
இந்த விவரங்கள் எல்லாம் தெரிய வந்ததும், உடனடியாக சன் பிக்ஸர்ஸ் நிறுவன சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா சென்னை போலீஸில் உதயகுமார் மீது புகார் பதிவு செய்தார். பின்னர் ரோபோ உரிமை யாருக்கும் விற்கப்படவில்லை என்று அறிவித்துவிட்டார்.
உடனடியாக ஷங்கரின் புரொடக்ஷன் மேனேஜர் உதயகுமார் கைது செய்யப்பட்டார்.
திருப்பதி திருமலா பிக்சர்ஸ் ஊழியர் மீதும் ஹைதராபாத் போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்திரன் படம் திரையுலக வர்த்தகத்தில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இது இன்னொரு சான்று